தமிழர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குடவோலை கோயில், உத்திரமேரூர் Vaikuntha Perumal Temple Uthiramerur
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர் ▶ 2:53
உத்திரமேரூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள இந்தக் கோயிலில் தான் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய பராந்தக சோழர் கால குடவோலை கல்வெட்டு உள்ளது. பூஜை நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும், மற்ற நேரங்களில் கல்வெட்டை மட்டும் பார்க்கலாம்.
- குடவோலை கல்வெட்டு ▶ 8:16
கோயிலின் பின்புறச் சுவரில் உள்ள இந்தக் கல்வெட்டில், தோட்டவாரியம் மற்றும் ஏரிக்காரிய வாரியத் தேர்தலுக்கான வேட்பாளர் தகுதிகள், தகுதியின்மைகள், பதவிக்காலம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. தகுதியானவர்களின் பெயரை ஓலையில் எழுதி குடத்தில் போட்டு ஒரு குழந்தையைக் கொண்டு எடுக்கச் செய்த தேர்தல் முறையும் இதில் விளக்கப்பட்டுள்ளது.